கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முனீஸ்வரர் நகரில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து ரூ. 12 லட்சம் மதிப்புள்ள 35 சவரன் தங்க நகைகள், இரண்டு வெள்ளி குத்துவிளக்குகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
ஓசூர் முனீஸ்வர் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜான் ஜோசப் கென்னடி. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் இவர், இன்று விடுமுறை என்பதால் தன் மனைவியுடன் அருகிலுள்ள தேவாலயத்திற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35 சவரன் தங்க நகைகள், இரண்டு வெள்ளி குத்து விளக்குகள் உள்ளிட்டவற்றை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார்.
தேவாலயம் சென்ற ஜான் ஜோசப் கென்னடி வீடு திரும்பியபோது வீட்டின் முன் கதவு திறந்திருந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதையடுத்து அவர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இரு வேட்பாளர்கள் இடையே மோதல்: வெளியான வீடியோ காட்சி!