கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக அண்டை மாநிலங்களில் எல்லைகளை மூடி போக்குவரத்தை தடை செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களின் எல்லையான ஜூஜூவாடியில் கர்நாடக வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.
ஒசூர் கோட்டாட்சியர் குமரேசன் தலைமையிலான அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு-கர்நாடாக மாநில எல்லைகளான கக்கனூர், சம்பங்கிரி, அந்திவாடி உள்ளிட்ட 6 இடங்களில் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்கள் ஊரடங்கு - வைரலாகும் வில்லிசைப்பாடல்!