கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளா் ரகுநாதன் தலைமையிலான காவலர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குந்துக்கோட்டை காப்புக்காட்டில் முட்புதரில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு நாட்டுத்துப்பாக்கியைக் காவலர்கள் கைப்பற்றி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அதேபோல், அஞ்செட்டி சிறப்புக் காவல் ஆய்வாளர் வீரகுமார் தலைமையிலான காவலர்கள் ரோந்து சென்றபோது, நாட்றம்பாளையம் சாலை கேரட்டி காப்புக் காட்டில் உள்ள ஒரு புதரில் கேட்பாரற்றுக் கிடந்த நாட்டுத்துப்பாக்கியைக் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட இரு துப்பாக்கிகளையும் வீசிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் யார் என்பது குறித்து உள்ளூர் கிராம மக்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், தடை செய்யப்பட்ட காப்புக் காட்டுக்குள் விலங்குகளை வேட்டையாட வந்த கும்பல், காவல்துறையினர் வருவதைக் கண்டு நாட்டுத் துப்பாக்கிகளைப் போட்டுவிட்டுச் சென்றார்களா அல்லது தேர்தல் நேரத்தில் உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருந்தால் சிக்கிக் கொள்வோம் என்ற அச்சத்தால் புதருக்குள் வீசி சென்றனரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அனுமதியின்றி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த மேஸ்திரி கைது!