கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் சி.வி.ராஜேந்திரன். இவர் கடந்த சில நாள்களாக சளி, இருமல் தொல்லையால் அவதிபட்டு வந்துள்ளார். இதையடுத்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அவர் கரோனா பரிசோதனை செய்துகொண்டார்.
பரிசோதனையின் முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:எஸ்பிபியின் இழப்பு தமிழ் திரையுலகத்திற்கு ஒரு பேரிழப்பு- அமைச்சர் கடம்பூர் ராஜு