ETV Bharat / state

திருச்செந்தூர் யானை தாக்குதல் சம்பவம் எதிரொலி: நெல்லை காந்திமதி யானையை சந்திக்க பக்தர்களுக்கு கட்டுப்பாடு! - NELLAIAPPAR TEMPLE ELEPHANT CAGED

திருச்செந்தூரில் யானை தெய்வானையின் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதியை பக்தர்கள் சந்திக்க கோயில் நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2024, 4:38 PM IST

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வளர்க்கப்படும் யானையான தெய்வானை தாக்கியதில் யானைப் பாகன் உதயகுமார் மற்றும் கோயிலுக்கு வந்த பக்தரான சிசுபாலன் ஆகிய இருவர் நேற்று படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பினை ஏற்படுத்தி நிலையில் இதன் எதிரொலியாக திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் வளர்க்கப்படும் யானை காந்திமதியை நேற்று மாலை முதல் பக்தர்கள் யாரும் அதன் அருகில் செல்லவோ, ஆசிர்வாதம் வாங்கவோ, அனுமதிக்க படவில்லை.

இதையும் படிங்க: "தமிழகம் தீவிரவாதத்தை வளர்க்கிறது என மத்திய அமைச்சர் கூறியது சங்கடமளிக்கிறது"- எம்.பி துரை வைகோ

மேலும் திருச்செந்தூரில் நேற்று நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து நேற்று மாலை முதலே யானை காந்திமதி கூண்டிற்குள் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அதனை பராமரிக்கும் பாகன்கள் மட்டுமே உணவு வழங்கும் நேரத்தில் கூண்டிற்குள் சென்று உணவினை வழங்குகிறார். மேலும் உணவு வழங்கிய பின்னர் அந்த கூண்டை பூட்டிவிட்டு செல்கின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நேற்றைய சம்பவத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாய்மொழி உத்தரவாக யானைகளை கூண்டிற்குள் வைத்து பராமரிக்கப்படுவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.