கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிக்குள்பட்ட சீதாராம் மேடு மூகொண்டபள்ளி அப்பாவுநகர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் நகர்ப்புற செவிலியர் சங்கத்தினர் இன்று (ஜூன் 10) ஓசூர் பேருந்து நிலையம் முன்பு ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், "நிரந்தர செவிலியர்கள் செய்யும் அனைத்துப் பணிகளையும் ஒப்பந்த செவிலியர்கள் மேற்கொள்கின்றனர். டெங்கு காய்ச்சல் பரவல், மலேரியா தடுப்புப்பணி, கரோனா தொற்று தடுப்புப்பணி போன்ற பணிகளில் ஒப்பந்த செவிலியர்களை அரசு பயன்படுத்துகிறது.
இருப்பினும், தங்களுக்கான ஊதியம் குறைந்த அளவே உள்ளது. எனவே, உயிரை பனயம் வைத்து கரேனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் ஒப்பந்த செவிலியர்களை தமிழ்நாடு முதலமைச்சர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என கோரிக்கைகளை முன்வைத்தனர்.