ETV Bharat / state

விவசாய நிலத்தை வளைத்துப்போட முயலும் தம்பிதுரை?; மின் இணைப்பு வழங்கவிடவில்லை என புகார் - ஓசூர்

தனது கல்லூரி மத்தியில் இருக்கும் விவசாய நிலத்தை குறைந்த விலையில் தனக்கு விற்பனை செய்து விடும் படியும், மறுத்ததால் நிலத்திற்கு மின் இணைப்பு வழங்க விடாமல் அதிகார துஷ்பிரயோகத்திலும் அதிமுக எம்.பி. தம்பிதுரை ஈடுபட்டு வருவதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விவசாய நிலத்தை வளைத்து போட முயலும் அதிமுக எம்பி; மின் இணைப்பு வழங்க விடாமல் அதிகார துஷ்பிரயோகம்

author img

By

Published : Feb 20, 2023, 7:57 PM IST

விவசாய நிலத்தை வளைத்துப்போட முயலும் தம்பிதுரை?; மின் இணைப்பு வழங்கவிடவில்லை என புகார்

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த பத்தளப்பள்ளியை சேர்ந்த சூடம்மா என்பவருக்குச் சொந்தமான 7 ஏக்கர் விவசாய நிலம், அதிமுகவின் மாநிலங்களவை எம்.பி.யும், கொள்கை பரப்பு செயலாளருமான மு.தம்பிதுரை என்பவருக்கு சொந்தமாக பத்தளப்பள்ளி பகுதியில் 480 ஏக்கர் நிலப்பரப்பில் கல்வி நிறுவனங்கள் மத்தியில் அமைந்துள்ளது.

இங்கு எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அதியமான் பொறியியல் கல்லூரி, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த நிலங்கள் வாங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், 60 ஆண்டுகளாக சூடம்மா என்பவரது விளைநிலத்தை தம்பிதுரை, பலமுறை வாங்க முயன்றும் அவர்கள் விற்க முன்வரவில்லை எனக்கூறப்படுகிறது.

தற்போது சூடம்மா மறைந்த நிலையில், அவரின் 5 பிள்ளைகள் அந்த நிலத்தில் மாமரம், தென்னை மரங்கள் அமைத்து ஊடு பயிராக விவசாயம் செய்தும் கால்நடைகளை வளர்த்தும் வந்துள்ளனர். பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலை பத்தளப்பள்ளியிலிருந்து திப்பாளம் வழியாக உத்தனப்பள்ளியை இணைக்கும் 60 அடி சாலை கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே இருப்பதால் இந்த சாலைகளில் காவலாளிகளை நிறுத்தி, தனது சாலையாக ஆக்கிரமித்திருப்பதால், கால்நடைகளை விற்றுவிட்டு விவசாயம் செய்யமுடியாமல் உள்ளனர்.

மேலும் 7 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்ய மின்சாரம் இல்லாமல் மின்இணைப்பு பெற பல ஆண்டுகளாக முயன்றும் ஆய்வுக்காக வரும் மின்வாரிய ஊழியர்களை உள்ளே அனுமதிக்காமலும் பலருக்கு லஞ்சம் வழங்கி, மிரட்டி மின் இணைப்பு வழங்க விடாமல் தடுத்து வந்துள்ளனர். தற்போது டீசல் மோட்டார்களை கொண்டு மரங்களுக்கு நீர்பாய்ச்சி வருவதாகவும் நிலத்தினை வாங்க பலமுறை தம்பிதுரை முயன்ற நிலையில் ஒரு ஏக்கர் 15 கோடி ரூபாய்க்கு அதிகம் என்கிற நிலையில் 7 ஏக்கர் நிலத்திற்கு 100 கோடி ரூபாய் வரை கேட்டுள்ளனர்.

ஆனால், தம்பிதுரை அடிமாட்டு விலைக்கு பேசிவிட்டு சென்றுவிட்டதாக உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து சூடம்மாவின் பேரன் ஹரிநாத் கூறுகையில், “100 கோடி ரூபாய் சொத்தை அடிமாட்டு விலைக்கு கேட்கும் தம்பிதுரைக்கு நாங்கள் விற்கவில்லை என்கிற கோபத்தில் மின்இணைப்பு கிடைக்கவிடாமல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறார்.

பொதுப்பாதையை ஆக்கிரமித்து நாங்கள் விளைநிலத்திற்கு வரவிடாமல் தடுப்பது குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு, ஓசூர் எம்எல்ஏ ஆகியோர் வரை மனு அளித்தும் பதில் இல்லை. எங்கள் நிலத்தைச் சுற்றிலும் அமைத்துள்ள வேலிகளை ஜேசிபி மூலம் அகற்றி அச்சுறுத்தலை வழங்குவதால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை தொடர்கிறது.

அதிமுக எம்.பி. என்கிற அரசியல் அடையாளத்தோடு பொதுப்பாதையினை ஆக்கிரமித்திருக்கும் அவரிடம் இருந்து மீட்டு, எங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமென ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளோம்'' என்றார். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக மூத்த நிர்வாகி கே.பி.முனுசாமி ஒருகோடி ரூபாய் கேட்ட விவகாரத்தின் புகைச்சல் அடங்குவதற்குள் இதே மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு மூத்த நிர்வாகியான மு.தம்பிதுரை மீது புகார் கிளம்பி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: கரூரில் அதிமுக முக்கியப்புள்ளி அன்புநாதன் திடீர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.