ETV Bharat / state

டெங்கு நோய் விழிப்புணர்வு பணிகள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு! - பூந்தோட்டம்

கிருஷ்ணகிரி: டெங்கு நோய்த் தடுப்பு விழிப்புணர்வு சுகாதார பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆட்சியர் ஆய்வு
author img

By

Published : Jun 19, 2019, 10:45 AM IST

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பூந்தோட்டம் பகுதியில் டெங்கு காய்ச்சல் கொசுகளை அழித்தல் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரபகர் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், அவர் கூறுகையில், "மாவட்டம் முழுவதும் நகராட்சி, சுகாதாரத் துறை சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள் நடைபெறவுள்ளது. அதனையொட்டி, கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பூந்தோட்டம் பகுதியில் இப்பணிகள் தொடங்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 33வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல், கொசு புழு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை நகராட்சி சார்பில் 56 பணியாளர்கள் மேற்கொள்ளவுள்ளார்கள். இதில், டெங்கு தடுப்பு மருந்து, முதிர் கொசுக்களை ஒழிக்கும் பைரித்திரம் புகை மருந்து, புகை மருந்து இயந்திரங்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள்:  ஆட்சியர் ஆய்வு
மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியபோது

மேலும், நகராட்சிக்குட்பட்ட 23பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு 60நாள் இடைவேளையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும். வீடுகளில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் சேகரிப்பு தொட்டிகளில் தடுப்பு மருந்து தெளிக்கப்படும்.

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள்:  ஆட்சியர் ஆய்வு
ஆட்சியர் ஆய்வு

பூந்தோட்டம் பகுதியில் - சாக்கடை கழிவு நீர் வெளியேறாமல் உள்ள இடங்களில் நகராட்சி சார்பாக மின் மோட்டார் அமைத்து கழிவு நீரை வெளியேற்ற வேண்டும். எனவே, பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தக் கூடிய நீர்த் தொட்டிகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்" எனப் பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

Intro:டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு சுகாதார பணிகளை மாவட்ட ஆட்சியர்
சு..பிரபாகர் நேரில் ஆய்வு.
Body:கிருஷ்ணகிரி நகராட்சிகுட்பட்ட பூந்தோட்டம் பகுதியில் டெங்கு காய்ச்சல் மற்றும் கொசு புழு
அழித்தல் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்பு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவிக்கும் போது:
மாவட்டம் முழுவதும் நகராட்சி மற்றும் சுகாதாரத் துறை சார்பில் டெங்கு தடுப்பு விழிப்பு
பணிகள் நடைபெறவுள்ளது. அதனையொட்டி இன்று கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பூந்தோட்டம்
பகுதியில் இப்பணிகள் துவக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 33 - வார்டுகளிலும்
டெங்கு காய்ச்சல் மற்றும் கொசு புழு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை
நகராட்சி சார்பில் 56 பணியாளர்கள் மேற்கொள்ளவுள்ளார்கள். இதில் டெங்கு தடுப்பு மருந்து அபேட்
மருந்து, முதிர் கொசுக்களை ஒழிக்கும் பைரித்திரம் புகை மருந்து, புகை மருந்து இயந்திரங்கள் 20-
ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. மேலும் நிலவேம்பு குடிநீர் நகராட்சிக்குட்பட்ட 23- பள்ளிகளில்
மாணவ மாணவியர்களுக்கு 60 நாள் இடைவேளையில் வழங்கப்படும். மேலும் பொதுமக்கள் அதிகம்
கூடும் பேருந்து நிலையம், பழையபேட்டை பழைய பேருந்துநிலையம், 5- ரோடு பகுதி, மற்றும் நகராட்சி
அலுவலகம் ஆகிய இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும்.
வீடு வீடா பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் சேகரிப்பு தொட்டிகளில் அபேட் மருந்து
தெளிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் மருத்துவமணை வளாகத்தில் உள்ள அனைத்து வார்டு
பகுதிகளிலும் புகை மருந்து தெளிக்கப்படும். பூந்தோட்டம் பகுதியில் - சாக்கடை கழிவு நீர்
வெளியேறாமல் உள்ள இடங்களில் நகராட்சி சார்பாக சிறிய தொட்டிகள் அமைத்து மின் மோட்டார்
அமைந்து கழிவு நீரை வெளியேற்ற வேண்டும். எனவே பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்த கூடிய நீர்
தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர்
அவர்கள் கேட்டுக்கொண்டார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.