ETV Bharat / state

குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்! - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிமராமத்து திட்டம்

கிருஷ்ணகிரி: குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

குடிமராமத்து பணிகளை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்!

author img

By

Published : Jun 5, 2020, 3:16 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுப்பணித் துறை சார்பாக பாலனப்பள்ளி ஊராட்சி சிகரலப்பள்ளி அணைக்கட்டு கால்வாயில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.52 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை, பிரதான் மந்திரி ஆவாஸ்யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகளையும், மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் குட்டை தூர்வாரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரால், 2020-21 நிதியாண்டிற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் பாலனப்பள்ளி ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பொதுப்பணித் துறை சார்பாக குடிமராமத்து பணிகள் நடைபெற்றுவருகின்றன.

குடிமராமத்து பணிகளை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்!
குடிமராமத்து பணிகளை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்!

அதனடிப்படையில் சிகரலப்பள்ளி அணைக்கட்டு கால்வாய் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை மழை காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, பாலனப்பள்ளி ஊராட்சி சிகரலப்பள்ளி கிராமத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடு கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

இறுதியாக, மணவாரனப்பள்ளி ஊராட்சி சீரனப்பள்ளி குட்டை மாநில நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.5.03 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.