இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் மகேந்திரன் இன்று ஒசூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசை எதிர்த்து மிகப்பெரிய அளவில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். வரும் 8ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய முழு கதவடைப்புப் போராட்டத்திற்கு 50 விவசாய சங்கங்கள் அழைப்புவிடுத்துள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் அதை ஆதரித்து விவசாயிகளோடு கைக்கோத்து களமிறங்குகிறோம். மத்திய அரசு விவசாயிகளின் பிரச்சினையை உடனடியாக உணர்ந்து சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு யானைகளால் அதிக அளவு தொல்லை ஏற்படுகிறது. யானைகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “ரஜினி என்ன சொல்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை அக்கட்சியின் கொள்கைகள், லட்சியங்கள் என்னவென்று இதுவரை தெரியவில்லை. அவரின் அரசியல் மதச்சார்பற்ற அரசியலாக இருக்குமோ என்பதில் சந்தேகம் உள்ளது” என்றார்.