கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 10ஆவது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட ஜிலானி வெற்றி பெற்றதாக அறிவித்த நிலையில், அதனை மாற்றி பாமக வேட்பாளர் வேல்முருகனுக்கு முறை கேடாக வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் தேர்தல் முடிவில் முறைப்படி வெற்றிப்பெற்ற திமுக வேட்பாளர் ஜிலானி ஏமாற்றமடைந்துள்ளார். மேலும் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளான அவர் முறைகேடாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட வேல்முருகனின் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
மேலும் இது குறித்து பேசிய அவர், கடந்த இரண்டாம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது பாமக வேட்பாளர் வேல்முருகன் பெற்ற வாக்குகளைவிட 48 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றேன், ஆனால் தேல்வி அடைந்த வேல்முருகனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கி என்னை ஏமாற்றி அங்கிருந்து விரட்டிவிட்டனர். இதனால் வேல்முருகனின் வெற்றியை ரத்து செய்து மீணடும் வாக்குகள் எண்ணப்பட வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீதிமன்ற அனுமதிக்காக காத்திருக்கும் சேவல் சண்டை