கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்தக் கூட்டம் இன்று (அக். 7) மாலை நடைபெற்றது.
இதில் மாவட்ட கூடுதல் நோய்த் தடுப்பு அலுவலர் பீலா ராஜேஷ், அனைத்து துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ், "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய்த் தடுப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளபட்டுவருகிறது. இதுவரை கரோனாவால் 4,993 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.
745 பேர் சிகிச்சைபு் பெற்றுவருகின்றனர். 23 பேர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். முகக் கவசம் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கை காரணமாக கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுடன் கூடுதலாக வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 அலுவலர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கபட்டவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளை உடனடியாக வழங்கிட வருவாய்த் துறை, மருத்துவத் துறை, தீயணைப்பு, பொதுப் பணித் துறையினர் தயாராக உள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை பேரிடரை எதிர்கொள்ள தயார்!