கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜக்கடை பகுதியில் கிராமப்புற சமூக நலவாழ்வு அறக்கட்டளை சார்பாக கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
இந்த அறக்கட்டளையுடன், தனியார் மருத்துவமனை இணைந்து பொதுமக்களுக்கு அவர்களுடைய வீடுகளுக்கே சென்று, கிருமி நாசினி தெளித்தும், முகக்கவசம், பொதுவான மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் தொண்டு நிறுவனத்தினர், தனியார் மருத்துவமனை ஊழியர்கள், காவல் துறையினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: முதியவர் மரணம் - காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய எஸ்டிபிஐ கோரிக்கை