ETV Bharat / state

'கலவரத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்புகளைத் தடைசெய்க!' - Krishnagiri Latest News

கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம் பெங்களூரு காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டை சூறையாடி கலவரத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்புகளைத் தடைசெய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு எல்லையான ஜுஜுவாடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Arjun sambath protest in TN
Arjun sambath protest in TN
author img

By

Published : Aug 29, 2020, 1:12 AM IST

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் வீட்டை இஸ்லாமிய அமைப்பினர் சூரையாடி கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதனைக் கண்டித்து அந்த அமைப்புகளை நாடு முழுவதும் தடைசெய்ய கோரியும், இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் தலைமையில் தமிழ்நாடு எல்லையான ஜுஜுவாடி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், கர்நாடக மாநிலம் பெங்களூரு கலவரத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புகளை நாடு முழுவதும் தடைசெய்ய வேண்டும், கலவரத்தில் ஈடுபட்டவர்களை தேச துரோக வழக்கில் கைதுசெய்ய வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கர்நாடக எல்லைப் பகுதிக்குள் நுழைய முயன்ற அவர்களை தமிழ்நாடு காவல் துறையினர் தடுப்பு வேலிகளை வைத்து தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மாநில எல்லைப் பகுதியான ஜூஜூவாடி, சிப்காட் பகுதிகளில் நூற்றுக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.