கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் உள்ள கால்வாயில் அப்பகுதி மக்கள் சிலை ஒன்று இருப்பதைக் கண்டு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கால்வாயிலிருந்த சிலையை மீட்டு சுத்தம்செய்து பார்த்தபோது, 1.5 கிலோ எடை கொண்ட 26 செ.மீ. உயரம் கொண்ட ஐம்பொன்னாலான ஆஞ்சநேயர் சிலை என்பது தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினர் அந்தச் சிலையை வருவாய்த் துறையினரிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.
மேலும், ஓசூர் நகர காவல் துறையினர் ஐம்பொன்னாலான சிலை எவ்வாறு இங்கு வந்தது, யாரேனும் இங்கு பதுக்கிவைத்தனரா? எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: குழி தோண்டியபோது அம்மன் சிலை கண்டெடுப்பு - புதைந்திருந்த வரலாற்று நிகழ்வுகள்!