தமிழ்நாடு முதலமைச்சர் 2016 ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் கால்நடைகளுக்கான அவசர கால்நடை மருத்துவ சேவையினை இருப்பிடங்களிலேயே வழங்கவும், மிக மோசமாக பாதிக்கப்பட்ட கால்நடைகளை தொடர் சிகிச்சைக்காக அருகிலுள்ள கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு மாற்றிடும் சேவைகளை வழங்கிட தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2016-17இன் கீழ் ரூ.18.93 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 22 வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் நவம்பர் 5ஆம் தேதி வழங்கப்பட்டது.
தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள நகரும் கால்நடை மருத்துவ அவசர ஊர்தியினை நேற்று மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். தங்கள் கால்நடைகளின் அவசர சிகிச்சைகளை அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் சிகிச்சை வசதி கிடைக்காத விவசாயிகள் ‘1962' என்ற இலவச எண்ணை அழைத்து கால்நடைகளுக்கான மருத்துவச் சேவையினை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர். மேலும், இம்மருத்துவ சேவை காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:
அரசு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க ஆர்ப்பாட்டம்!