ETV Bharat / state

வேளாண்மை மாணவர்கள் விவசாயிகளுக்கு நேரடி தொழில்நுட்ப செய்முறை வழிகாட்டல்!

கிருஷ்ணகிரி: வேளாண்மை மாணவர்கள் விவசாயிகளுக்கு களப்பயிற்சி மற்றும் நேரடி தொழில்நுட்ப செய்முறை வழிகாட்டல் நிகழ்வு குறித்த சிறப்புச் செய்தி.

AGRICULTURAL SPECIAL STORY  வேளாண்மை மாணவர்கள் களப்பயிற்சி
AGRICULTURAL SPECIAL STORY
author img

By

Published : Dec 3, 2019, 7:14 AM IST

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வாழவச்சனூர் திருவண்ணாமலை, அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளநிலை இறுதியாண்டு வேளாண்மை மாணவர்கள் கிராம வேளாண்மை பணி அனுபவம் (rural agricultural work experience) என்ற பெயரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மண்டல ஆராய்ச்சி நிலையம் பையூரில் காளியம்மாள் என்பவரது தோட்டத்தில் திருந்திய நெல் சாகுபடி விவசாயம் பற்றி (system of rice intensification) நான்கு தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி எவ்வாறு நெல் மகசூலை பெருக்குவது, நோய் வராமல் தடுப்பது, நெல் சாகுபடியில் எவ்வாறு நீர்வள மேலாண்மை செய்வது, இயற்கை உரங்களை பயன்படுத்தி எவ்வாறு பூச்சிகளை கட்டுப்படுத்துவது என்பது பற்றி வேளாண்மை இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் எடுத்துரைத்தனர்.

வாழவச்சனூர் வேளாண்மைக் கல்லூரி மாணவர் பொன்னரசன் என்பவர் நெல்லில் பசுந்தாள் உரம் இடும் முறை குறித்து விளக்கினார். தக்கைப்பூண்டு என்ற பசுந்தாள் உரத்தை பயன்படுத்தி வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜனை நிலைநிறுத்தும் யூரியாவின் உபயோகத்தை குறைப்பதற்கு பசுந்தாள் உரம் எவ்வாறு பயன்படுகிறது என்பதை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

வேளாண்மை மாணவர்கள் களப்பயிற்சி

பசுந்தாள் உரம் மூலம் மண்ணின் ஈரப்பதத்தை பிடித்து வைத்துக் கொள்ளும் தன்மையை அதிகரிப்பது போன்ற தொழில் நுட்பத்தை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். நெல்லில் விதை நேர்த்தி செய்வது பற்றி திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மாணவி ராஜ் சந்தியா அடுத்த தொழில்நுட்பமாக நெல்லினை விதை நேர்த்தி செய்து நாற்றங்காலில் பூச்சிகள் விதை நெல்லை அழிக்காமல், விதை மூலம் பரவும் நோய்களை தடுக்கும் முறைகளை டிரைக்கோடெர்மா விரிடி என்ற உயிர்க் கொல்லி மருந்து கொண்டு எவ்வாறு விதை நேர்த்தி செய்வது என்பதை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

மற்றொரு வேளாண்மை மாணவர் பிரேம் குமார் என்பவர், நெல்லில் நீர் மேலாண்மை செய்து நெல்லில் நீர் பழக்கம் அதிகப்படுத்தாமல் தொடர்ந்து தண்ணீரை வயல்களில் கட்டி வைக்காமல் சரியான அளவு உபயோகித்து நெல்லின் மகசூலை எவ்வாறு அதிகமாகப் பெறுவது என்பதை குறித்து விவசாயிகளுக்கு விவரித்தார்.

வேளாண்மை மாணவர்கள் களப்பயிற்சி மற்றும் செய்முறை வழிக்காட்டல்

காவியா என்ற மாணவி வேப்பெண்ணெய் கரைசல் தெளித்து இயற்கை விவசாய முறையில் குறைந்த செலவில் எவ்வாறு ரசாயனம் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்காமல் இயற்கையாகவே பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து விவசாயம் செய்வது என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார் மேலும் நேரடியாக வேப்பெண்ணை கரைசலை பயன்படுத்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகமாக நெல்லில் தாக்குதலை ஏற்படுத்தும் யானைக் கொம்பு பூச்சி தாக்குதலை நெல்லில் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த தோட்டக்கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் பெரிய குளத்தைச் சார்ந்த தோட்டக்கலை ஆராய்ச்சி மாணவி மகாலட்சுமி என்பவர் மஞ்சள் தாவரத்தில் மஞ்சள் கிழங்கு மூலமாக கிழங்கை முழுவதுமாக நட்டு வளர்ப்பதை விட ஒற்றை கணுக்களாக தரித்து நட்டு சாகுபடி செய்வதால் அதிகமான பயிர்களை பெறுவது, அதிகமான மகசூல் பெறுவது போன்ற முறைகளை பற்றி விளக்கினார்.

வேளான் தொழில்நுட்ப செய்முறை வழிகாட்டல் குறித்து ஆசிரியர்

தொடர்ந்து மௌனிகா என்ற மாணவி மஞ்சள் தாவரத்தில் அதன் தழைகள் மற்றும் தாவரத்தின் இலைகளின் முழு பரப்பிலும் பூஞ்சான் மூலம் ஏற்படக்கூடிய நோய் கட்டுப்படுத்துதல் பற்றி விவசாயிக்கு விரிவாக எடுத்துக் கூறினார். மேற்கண்ட தொழில் முறைகளை பயன்படுத்தி அதிக மகசூல் கண்ட அருகிலுள்ள காளியம்மாள் என்ற விவசாயி நெல்லில் நீர் மேலாண்மை செய்து ஒரு முறை அறுவடை முடிந்தவுடன் நாற்றங்காலில் தண்ணீர் தேக்கி வைத்து இருந்தால் அதனை முழுவதுமாக வடித்து விட்டு புதிய நீர் தேக்கி நெல் நீர் குழாய் பயன்படுத்தி தொடர்புடைய விவசாய தொழில்நுட்ப முறையில் வெற்றி பெற்றது பற்றி இ டிவி பாரத்திடம் கூறினார்.

மஞ்சள் சாகுபடி செய்து வரும் விவசாயிகள் வேடியப்பன் என்ற விவசாயி இடிவி பாரத்திடம் கூறும் பொழுது பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மாணவர்கள் பரிந்துரைத்த ஒற்றைக் கணு (single bud) மூலமாக மஞ்சள் நடவு செய்து அதிக மகசூலை பெற்றதாக நமக்கு தெரிவித்தார். தொடர்ந்து பூஞ்சாணத்தின் மூலம் மஞ்சள் இலைகளின் மீது பரவும் நோய்க்கு காப்பர் ஆக்சி குளோரைடு மற்றும் மேன்கோசெப் பூஞ்சாண தடுப்பு மருந்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று எடுத்துரைத்தனர் அவ்வண்ணமே செயல்பட்டு வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

வேளான் தொழில்நுட்ப செய்முறை வழிகாட்டல் குறித்து விவசாயிகள்

Intro:வேளாண்மை மாணவர்கள் களப்பயிற்சி விவசாயிகளுக்கு நேரடி தொழில்நுட்ப செய்முறை வழிகாட்டல் வழங்கல்.Body:வேளாண்மை மாணவர்கள் களப்பயிற்சி விவசாயிகளுக்கு நேரடி தொழில்நுட்ப செய்முறை வழிகாட்டல் வழங்கல்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின்
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வாழவச்சனூர் திருவண்ணாமலை,அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,திருச்சி ஆகிய மாவட்டத்தை சேர்ந்த இளநிலை இறுதியாண்டு வேளாண்மை மாணவர்கள் கிராம வேளாண்மை பணி அனுபவம் (rural agricultural work experience) என்ற பெயரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மண்டல ஆராய்ச்சி நிலையம் பையூரில்
காளியம்மாள் என்பவரது தோட்டத்தில் திருந்திய நெல் சாகுபடி விவசாயம் பற்றி (system of rice intensification) நான்கு தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி எவ்வாறு நெல் மகசூலை பெருக்குவது, நோய் வராமல் தடுப்பது, நெல் சாகுபடியில் எவ்வாறு நீர்வள மேலாண்மை செய்வது,இயற்கை உரங்களை பயன்படுத்தி எவ்வாறு பூச்சிகளை கட்டுப்படுத்துவது என்பது பற்றி வேளாண்மை இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் எடுத்துரைத்தனர்.
வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி மாணவர் பொன்னரசன் என்பவர் நெல்லில் பசுந்தாள் உரம் இடும் முறை குறித்து விளக்கினார்.

தக்கைப்பூண்டு என்ற பசுந்தாள் உரத்தை பயன்படுத்தி வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜனை நிலைநிறுத்தும் யூரியாவின் உபயோகத்தை குறைப்பதற்கு பசுந்தாள் உரம் எவ்வாறு பயன்படுகிறது என்பதை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

பசுந்தாள் உரம் மூலம் மண்ணின் ஈரப்பதத்தை பிடித்து வைத்துக் கொள்ளும் தன்மையை அதிகரிப்பது போன்ற தொழில் நுட்பத்தை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

நெல்லில் விதை நேர்த்தி செய்வது பற்றி திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மாணவி ராஜ் சந்தியா அடுத்த தொழில்நுட்பமாக நெல்லினை விதை நேர்த்தி செய்து நாற்றங்காலில் பூச்சிகள் விதை நெல்லை அழிக்காமல், விதை மூலம் பரவும் நோய்களை தடுக்கும் முறைகளை டிரைக்கோடெர்மா விரிடி என்ற உயிர்க் கொல்லி மருந்து கொண்டு எவ்வாறு விதை நேர்த்தி செய்வது என்பதை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

மற்றொரு வேளாண்மை மாணவர் பிரேம் குமார் என்பவர் நெல்லில் நீர் மேலாண்மை செய்து நெல்லில் நீர் பழக்கம் அதிகப்படுத்தாமல் தொடர்ந்து தண்ணீரை வயல்களில் கட்டி வைக்காமல் சரியான அளவு உபயோகித்து நெல்லின் மகசூலை எவ்வாறு அதிகமாக ப் பெறுவது என்பதை குறித்து விவசாயிகளுக்கு விவரித்தார்.

காவியா என்ற மாணவி வேப்பெண்ணெய் கரைசல் தெளித்து இயற்கை விவசாய முறையில் குறைந்த செலவில் எவ்வாறு ரசாயனம் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்காமல் இயற்கையாகவே பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து விவசாயம் செய்வது என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார் மேலும் நேரடியாக வேப்பெண்ணை கரைசலை பயன்படுத்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகமாக நெல்லில் தாக்குதலை ஏற்படுத்தும் யானைக் கொம்பு பூச்சி தாக்குதலை நெல்லில் எவ்வாறு கட்டுப்படுத்த குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த தோட்டக்கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் பெரிய குளத்தைச் சார்ந்த தோட்டக்கலை ஆராய்ச்சி மாணவி மகாலட்சுமி என்பவர் மஞ்சள் தாவரத்தில் மஞ்சள் கிழங்கு மூலமாக கிழங்கை முழுவதுமாக நட்டு வளர்ப்பதை விட ஒற்றை கணுக்களாக தரித்து நட்டு சாகுபடி செய்வதால் அதிகமான பயிர்களை பெறுவதும், அதிகமான மகசூல் பெறுவது போன்ற முறைகளை பற்றி விளக்கினார்.

தொடர்ந்து மௌனிகா என்ற மாணவி மஞ்சள் தாவரத்தில் அதன் தழைகளில் மற்றும் தாவரத்தின் இலைகளின் முழு பரப்பிலும் பூஞ்சான் மூலம் ஏற்படக்கூடிய நோய் கட்டுப்படுத்துதல் பற்றி விவசாயிக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.

மேற்கண்ட தொழில் முறைகளை பயன்படுத்தி அதிக மகசூல் கண்ட அருகிலுள்ள காளியம்மாள் என்ற விவசாயி நெல்லில் நீர் மேலாண்மை செய்து ஒரு முறை அறுவடை முடிந்தவுடன் நாற்றங்காலில் தண்ணீர் தேக்கி வைத்து இருந்தால் அதனை முழுவதுமாக வடித்து விட்டு புதிய நீர் தேக்கி நெல் நீர் குழாய் பயன்படுத்தி தொடர்புடைய விவசாய தொழில்நுட்ப முறையில் வெற்றி பெற்றது பற்றி இ டிவி பாரத்திடம் கூறினார்.

மஞ்சள் சாகுபடி செய்து வரும் விவசாயிகள் வேடியப்பன் என்ற விவசாயி இடிவி பாரத்திடம் கூறும் பொழுது பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மாணவர்கள் பரிந்துரைத்த ஒற்றைக் கணு (single bud) மூலமாக மஞ்சள் நடவு செய்து அதிக மகசூலை பெற்றதாக நமக்கு தெரிவித்தார். தொடர்ந்து பூஞ்சாண த்தின் மூலம் மஞ்சள் இலைகளின் மீது பரவும் நோய்க்கு காப்பர் ஆக்சி குளோரைடு மற்றும் மேன்கோசெப் பூஞ்சாண தடுப்பு மருந்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று எடுத்துரைத்தனர் அவ்வண்ணமே செயல்பட்டு வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.