கோவை மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. பெரியய்யா நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழ்நாடு - கர்நாடக எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு முகக் கவசம்,கையுறை ஆகியவற்றை வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அரசு கூறுவதை போல பொதுமக்கள் வீட்டில் தனித்திருந்தால் மட்டுமே கரோனா வைரசை ஒழிக்கமுடியும். நமது கோவைமண்டலத்தில் 274 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 204 பேர் குணமடைந்துள்ளனர். 70 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். அவர்களும் சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என்று தெரிவித்தார்.
ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 60 ஆயிரம் வழக்குகள் நமது மண்டலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 40 ஆயிரம் வழக்குகள் இருசக்கர வாகன வழக்குகளாகும். மேலும் வாட்ஸ் அப்பில் வதந்திபரப்பியதாக 36 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:கரோனா எதிரொலி: பத்து பேர் முன்னிலையில் எளிமையாக நடந்த திருமணம்!