கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையில் கங்கலேரி கூட்டுரோடு அருகே தேர்தல் பறக்கும்படை அலுவலரும், வேளாண்மை இளநிலை அலுவலருமான பாஸ்கரன் மற்றும் எஸ்.எஸ்.ஐ. சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் ஐந்து லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தனியார் இருசக்கர வாகனம் விற்பனை நிலையத்தில், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து தொகையினை எடுத்துச் செல்வதாக கூறினர்.
ஆனால், அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதால், அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த அலுவலர்கள் கிருஷ்ணகிரி உதவி தேர்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான சரவணனிடம் ஒப்படைத்தனர். அந்த பணத்தை அவர் கிருஷ்ணகிரி மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தார்.