ETV Bharat / state

ஒரே இரவில் 'இரண்டு மாத உழைப்பை' துவம்சம் செய்த யானைக் கூட்டம்! - 4 elephant damaged farmer land issue at krishnagiri

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே விவசாயி ஒருவரின் இரண்டு மாத உழைப்பை ஒரே இரவில் யானைக் கூட்டம் சூறையாடியது.

கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி
author img

By

Published : Mar 27, 2020, 7:26 PM IST

விவசாயிகளுக்கும் யானைகளுக்கும் இடையே நிகழும் போர் நீண்டகாலம் ஆகியும் தீர்க்க முடியாமல் உள்ளது. கடின உழைப்புகள் கண் எதிரே வீணாக செல்வதை பார்க்க முடியவில்லை என விவசாயிகள் பலர் வேதனை தெரிவிக்கின்றனர்.

கிருஷ்ணகிரியில் ஜார்கலட்டி கிராமத்தில் வசித்து வரும் முனியப்பா என்ற விவசாயி, தனது 5 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார். இரண்டு மாதங்கள் கழித்து தக்காளி விற்பனைக்கு ஏதுவாக சரியான தருணத்தில் பயிர் இருந்தது.

இரண்டு மாத உழைப்பு' துவம்சம் செய்த யானை கூட்டம்

இந்நிலையில், நேற்று (மார்ச் 26) நள்ளிரவில் திடீரென வனப் பகுதியிலிருந்து கிராமத்திற்குள் புகுந்த 4 யானைகள், முனியப்பாவின் தோட்டத்தை சூறையாடின. இதில், அனைத்து காய்கறிகளும் வீணானது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி, வனத்துறை சார்பில் நிவாரணம் வழக்கக்கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவு மீறல்: 101 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.