கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வசித்து வருகின்றனர் சிவலிங்கம்,அலுமேலு தம்பதியி. இவர்கள் ஆடு வளர்க்கும் தொழில் செய்துவருவதால், தங்களது வீட்டின் அருகே ஆட்டு கொட்டகை அமைத்து அதைப் பராமரித்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைத்து வந்தனர்.
இந்த நிலையில் நள்ளிரவில், ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்து பார்த்தபோது 15 ஆடுகள் உடலில், கழுத்து, வயிறு போன்ற பகுதிகளில் கிழிக்கப்பட்டு, குடல்கள் வெளியே வந்த நிலையில் இறந்து கிடந்தன.
உடனே பொதுமக்கள் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் அவர்கள் வந்து சோதனை செய்ததில் தெரு நாய்கள் கடித்ததில் ஆடுகள் உயிரிழிந்தது தெரிய வந்தது. ஆடுகளை வாழ்வாதாரமாக கொண்டுள்ள அலுமேலு குடும்பத்தார் ஆடுகள் இறந்ததை பார்த்து நெஞ்சை அடித்தக்கொண்டு அழுதனர்.
மேலும், இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசிடம் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 6 வயது சிறுவன் திடீர் மரணம்: உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகம்