ETV Bharat / state

இளைஞர் கட்டையால் அடித்து கொலை- இருவர் கைது; ஒருவர் தப்பி ஓட்டம்! - காவல்துறை விசாரணை

கரூர்: குளித்தலை அருகே இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞரை கட்டையால் அடித்து கொலை செய்த இருவரை காவல் துறை கைது செய்துள்ளனர்.

Youth beaten to death - two arrested; One fled!

author img

By

Published : Jul 13, 2020, 11:50 PM IST

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்திற்கு உட்பட்ட நச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலு. இவர் அதேப்பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் சுருதியிடம் பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சங்கர் (22), சதீஷ் (33) மற்றும் வேலு ஆகிய மூவரும் இணைந்து வடிவேலை கட்டையால் தலையில் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த வடிவேலு தரையில் மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மூவரும் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் வடிவேலு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.மேலும் தனது மகன் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது தாயார் செல்லம்மாள் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபொழுது, சங்கர், சதீஷ் மற்றும் வேலு மூவரும் இணைந்து கட்டையால் தாக்கி வடிவேலுவை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து சங்கர், சதீஷ் இருவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் வேலுவை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.