கரூர் மாவட்டம், மாயனூர் சின்னம்மநாயக்கன்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த பாண்டியன் என்வரது மகன் சுதாகர்(21). அவர் தனியார் பால் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ்(22) என்பவரும் பணி புரிந்து வந்தார்.
இந்ந நிலையில் லோகேஷ் செய்தி தொலைக்காட்சி பாணியில், சுதாகரின் புகைப்படத்தை வைத்து சின்னம்மநாயக்கன்பட்டியில் நாளை முழு ஊரடங்கு எனவும், சுதாகரை சின்னம்மநாயக்கன்பட்டி மாவட்ட ஆட்சியர் எனவும் காணொலி உருவாக்கி, அதனை வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டுள்ளார்.
அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சுதாகர், தனது பெயரை தவறாகப் பயன்படுத்தி பொய்யான தகவல் பரப்புவதாக லோகேஷ் மீது மாயனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் லோகேஷை காவல் துறையினர் 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: 'யானைகள் இறப்பு குறித்து தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை பாயும்'