ETV Bharat / state

ஃப்ரீ ஃபயர் கேமால் இளைஞர் தற்கொலை -  வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு பரிதாப முடிவு!

author img

By

Published : Jun 7, 2022, 7:29 PM IST

கரூரில் ஆன்லைன் விளையாட்டான ‘ஃப்ரீ ஃபயர்’ விளையாட்டில் மூழ்கி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’கேம்முக்கு யாரும் அடிக்ட் ஆகாதாதீங்க..!’ : ஆன்லைன் விளையாட்டால் உயிரிழந்த இளைஞரின் கடைசி வாட்ஸ் ஆப் ஸ்டெட்டஸ்
’கேம்முக்கு யாரும் அடிக்ட் ஆகாதாதீங்க..!’ : ஆன்லைன் விளையாட்டால் உயிரிழந்த இளைஞரின் கடைசி வாட்ஸ் ஆப் ஸ்டெட்டஸ்

ஃப்ரீ ஃபயர் கேமால் இளைஞர் தற்கொலை - வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு பரிதாப முடிவு!

கரூர்: நவீன வகை ஆண்ட்ராய்டு போன்களில் இலவசமாக ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளில் ஆன்லைன் ’பப்ஜி’, ஆன்லைன் ரம்மி விளையாட்டு, ’ஃப்ரீ ஃபயர்’ போன்ற விளையாட்டுகள் சமீபகாலமாக பிரபலமாகி வருகின்றன. பொழுதுபோக்குக்காக விளையாடத் தொடங்கியவர்களுக்கு நாளடைவில் விளையாட்டில் அடுத்த லெவல் அதிகரிக்கப்படுவதால், விளையாட்டில் கூடும் சுவாரஸ்யங்களைப் பெறுவதற்காக இரவு பகலாக தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர்.

’கேமுக்கு யாரும் அடிக்ட் ஆகாதீங்க..!’ : ஆன்லைன் விளையாட்டால் உயிரிழந்த இளைஞரின் கடைசி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்

ஆன்லைன் பப்ஜி கேம்களில் உருவாக்கப்படும் ஐடிகள் சிறப்பாக இருப்பின் அதனை விலை கொடுத்து பெற்றுக்கொள்வதற்கு, ஆன்லைனில் விளையாடும் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். விற்பனை செய்ய விரும்பாதவர்களிடம் ஆயிரக்கணக்கில் பேரங்களும் நடைபெற்றுவருகின்றன.

உயிரிழந்த சஞ்சய்

மற்றொருபுறம் ஆன்லைன் ஹேக்கர்ஸ் மூலமாக ஐடிகளைக் கைப்பற்றி கடவுச் சொற்களை மாற்றிக் கொள்வதினால் மீண்டும் அந்த ஐடியைப் பெற முடியாது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் இளைஞர்கள் தற்கொலை வரை தள்ளப்படுகிறார்கள். அதேபோல கரூர் அருகே உள்ள தாந்தோன்றிமலை, சிவசக்தி நகர்ப் பகுதியில் தந்தையைப் பிரிந்து தாயுடன் வசித்து வந்த சஞ்சய்(23), என்ற இளைஞர் நேற்று மாலை தாயின் சேலையை மின்விசிறியில் கட்டி, அதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தத் தற்கொலை சம்பவம் குறித்து தாந்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞரின் உடலைக் கைப்பற்றி கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் நடைபெற்ற விசாரணையில் உயிரிழந்த சஞ்சயின் செல்போனை கைப்பற்றி போலீசார் பார்த்தபொழுது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

உயிரிழந்த சஞ்சய் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ஸில் "கேம்முக்கு யாரும் அடிக்ட் ஆகாதாதீங்க. என்ன மாதிரி ஏமாறாதீங்க... ஏதாவது சாதீங்க. ஃபிரீ ஃபயர் விளையாட்டில் ஒரு லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளேன். இந்த செயலியை தடை செய்தால் தான் தன்னைப் போன்று யாரும் பாதிக்கப்படமாட்டார்கள்’’ என வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டு மோசடிகள் மற்றும் மன அழுத்தத்தால் பள்ளி சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் என வயது வரம்பின்றி பாதிக்கப்பட்டு வருவதைத் தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு விரைவில் இவ்வகையான மரணங்களைத் தடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: கூலிங் பீர் கேட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.