கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் மாவத்தூரைச் சேர்ந்த தங்கவேலுவும் (வயது 23), அரவக்குறிச்சி வட்டம் ராஜபுரம் ஊரைச் சேர்ந்த கீர்த்திகாவும் கடந்த 03ஆம் தேதியன்று காதல் திருமணம் செய்துகொண்டனர்.
இந்தத் திருமணத்தில் பெண் வீட்டாருக்கு சம்மதம் இல்லை. இதனால் மணமக்களை அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் மாரியப்பன் என்பவரின் துணையுடன் தோகமலை காவல்நிலையத்தில் புகாரளிக்க தங்கவேல், கிருத்திகா ஆகியோர் சென்றனர்.
அப்போது காவல்நிலையத்தில் இருந்த காவல் ஆய்வாளர் ஜெகதீசன், உதவி காவல் ஆய்வாளர் பரமேஸ்வரன், பெண் காவலர் முத்துலெட்சுமி ஆகியோர் புகாரை வாங்க மறுத்ததுடன் அவர்களை விரட்டியுள்ளனர்.
இந்நிலையில், காவல்நிலையத்திற்கு வந்த பெண் வீட்டார் பெண்ணை தாக்கியதோடு மட்டுமில்லாமல் அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டனர்.
காவல்நிலையம் முன்பு நடந்த இச்சம்பவத்தை அங்குள்ள காவலர்கள் வெளியே நின்று வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தேனியில் அரசு மருத்துவர்கள் உள்பட 119 பேருக்கு கரோனா!