கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் புஞ்சைபுகழூர் அடுத்த வேலாயுதம்பாளையத்தில் செயல்பட்டுவருகிறது. அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்களின் குடிநீர் ஆதாரமாக நொய்யல், காவேரி ஆகிய இரண்டு ஆறுகள் விளங்குகின்றன. இந்த இரு ஆறுகளால் விவசாய நிலம் பல ஆயிரக்கணக்கில் பயனடைகிறது. மேலும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்கிறது.
ஆனால், தமிழ்நாடு காகித ஆலையில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதன் மூலம் அப்பகுதியில் இருக்கக்கூடிய விவசாயம், அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தண்ணீரில் கழிவு கலப்பதன் மூலம் பழுப்பு நிறத்தில் மாறியதோடு மட்டுமல்லாது துர்நாற்றமும் அதிகமாக வீசுகிறது.
இதனால் மிகுந்த வேதனைக்குள்ளான அம்மக்கள் இதனை அரசுக்குப் பலமுறை எடுத்துக்கூறியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் புலம்புகின்றனர். எனவே, அரசு இதனைக் கருத்தில்கொண்டு அப்பகுதி மக்களுக்கு நல்ல தீர்வு வழங்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கூறுகின்றனர்.
மேலும் அந்த ஆற்றில் கழிவுகள் அதிகமாக தேங்கியிருப்பதால் தண்ணீர் செல்வதற்கு மிகுந்த தடையாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: ஏழ்மையிலும் சாதனை: இரட்டை சகோதரிகளுக்கு அரசின் உதவி கிடைக்குமா?