ETV Bharat / state

Karur Temple Untouchability: கரூர் கோயிலில் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு; இழுத்துப் பூட்டிய அதிகாரிகள்..! - வீரணம்பட்டி காளியம்மன் கோயில்

கரூர் அருகே வீரணம்பட்டி காளியம்மன் பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் பட்டியலினத்தவரை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்தாததால் கோயிலுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்துள்ளனர்.

untouchability in Karur like Villupuram Scheduled caste people are barred from entering the temple Officials sealed the temple
பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு
author img

By

Published : Jun 9, 2023, 7:06 PM IST

கரூர் கோயிலில் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு

கரூர்: கடவூர் வட்டம் வீரணம்பட்டியில் ஆதிதிராவிடர் (பறையர்) மக்களும், பிற்படுத்தப்பட்ட சமூகமான ஊராளி கவுண்டர் சமூகமும் கடந்த நான்கு தலைமுறையாக பகவதி அம்மன், காளி அம்மன் கோவில் திருவிழாவை இணைந்து நடத்தி வந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற திருவிழாவின்போது, கரகம் எடுக்கும் நிகழ்ச்சியில் தகராறு ஏற்பட்டு காவல் நிலையம் வரை சென்றாக கூறப்படுகிறது.

இதனால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் நடத்தும் மளிகை கடை டீ கடை போன்றவற்றில் பட்டியல் இனத்தவர்களுக்கு பொருட்கள் வழங்குவது இல்லை என முடிவெடுத்து ஊர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீரணம்பட்டி ஆதிதிராவிடர் மக்கள் அவர்கள் பகுதிக்குள்ளேயே மளிகை கடை, டீக்கடை வைத்துக் கொண்டனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தனித்து, அக்கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துள்ளனர். மேலும் கும்பாபிஷேக விழாவிற்கு ஆதிதிராவிடர் சமூகத்தில் இருந்து கோயிலுக்குள் உள்ளே யாரும் வரக்கூடாது என கட்டுப்பாடும் விதித்து விழாவை நடத்தியுள்ளனர். மேலும் திருவிழா முழுவதும் பறை இசை முழங்கும் உரிமையும் பறிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் வைகாசி திருவிழா இந்த ஆண்டு ஜீன்6 ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஜூன் 7ம் தேதி புதன்கிழமை காலை கிடாவெட்டு பூஜையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் சக்திவேல் என்பவர் எப்பொழுதும் போல அனைவரையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என கோரி கோயிலில் சாமி கும்பிட்டுள்ளார்.

அப்போது, அவருக்கு திருநீறு தர மறுத்து உள்ளே நுழையக்கூடாது என மற்றொரு தரப்பினர் இளைஞரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அப்பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி, பிற அரசு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
அதன் அடிப்படையில் வீரணம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் அனைவரும் ஒருங்கிணைந்து திருவிழாவை நடத்த வேண்டும் என அரசு அதிகாரிகள் கூறியதை ஏற்க மறுத்து, மற்றொரு தரப்பு வெளியேறியதுடன் கிடா வெட்டு நடத்தி திருவிழாவை தொடர்ந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா தேவி, ஆதிதிராவிடர் மக்கள் கோயிலுக்குள் நுழைந்து வழிபாடு நடத்த அனுமதி மறுத்தால், கோயிலை அரசு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் என கூறினார். இதனை ஏற்க மறுத்து அப்பகுதியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலைகளை மறைத்தும், அதிகாரிகளை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து கோயில் கதவுகளை குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா தேவி பூட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது மண்ணை வாரி இறைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பூட்டப்பட்ட பூட்டை உடைத்து அம்மனுக்கு அலங்கரிக்க வைக்கப்பட்டிருந்த கரகத்தினை வெளியே எடுத்துச் சென்று நீரில் கரைத்தனர்.

இதனைத் தொடர்ந்து வீரணம்பட்டி காளியம்மன், பகவதி அம்மன் கோயிலுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்து பூட்டினார். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பு கோயிலில் வைக்கப்பட்ட சீலை நீக்க வேண்டும் என வலியுறுத்தி, சாலைகளை மறித்து, சாலையில் உணவு சமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு அதிகாரிகள், ஆதி திராவிடர் மக்களை கோயிலுக்குள் வழிபாடு நடத்த அனுமதித்தால் மட்டுமே கோயிலை மீண்டும் திறக்க முடியும் என தெரிவித்துள்ளனர். அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து சாலைகளை மறித்து மாற்று சமூகத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Karur Temple Untouchability
Karur Temple Untouchability

இதுகுறித்து ஈடிவி பாரத் செய்திகளுக்கு சிறப்பு பேட்டி அளித்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ஜெகதீசன் கூறுகையில், “கரூர் மாவட்டத்தில் சாதிய வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதற்கு ஆதிக்க சாதி அமைப்புகள் சமீப காலமாக ரகசிய கூட்டங்களை நடத்தி மக்களை பிளவுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

மேலும் கரூர் வீரணம்பட்டி காளியம்மன் பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிருந்து நடத்தும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், திமுகவைச் சேர்ந்த கடவூர் முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் அழகர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன், ஊர் முக்கியஸ்தர்கள் வையாபுரி, கண்ணப்பன், ஆறுமுகம் ஆகியோர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே பிரச்சனை முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.

மேலும் கோயிலை திறக்க கோரி ஆதிக்க சமூகத்தினர் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து சமூக வலைதளங்களில் சாதி வெறியை தூண்டும் வகையில் வீடியோக்கள் பதிவேற்றி வரும் இளைஞர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

கரூர் மாவட்டத்தில் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்க மறுத்து நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் களத்திற்கு சென்று பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே சமத்துவ விரும்பிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: விழுப்புரத்தில் 'தீண்டாமை' விவகாரம்.. மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.