நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது எனவும், அதனை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டுமெனவும் கேரளா, தெலங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநில முதலைமைச்சர்களுக்கு கடந்த 4-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முயற்சி
அக்கடிதத்தில், சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் - 2021 என்ற சட்ட முன்வடிவு உள்ளிட்ட நீட் ரத்து குறித்து தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முயற்சிகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீட் தேர்வு குறித்து ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான கமிட்டி அளித்த அறிக்கையின் நகல் ஆகியவற்றை மொழிபெயர்த்து பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று வழங்கி, தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு கோர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
சந்திப்பு
அதனடிப்படையில் திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி, ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, தமிழக முதலமைச்சரின் கடிதம் மற்றும் ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையின் மொழிபெயர்ப்பு நகல் ஆகியவற்றை வழங்கி ஆதரவு கோரினார்.
இதையும் படிங்க :பருவ மழையை எதிர்கொள்ள தயார் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி