ETV Bharat / state

கூட்டு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்

author img

By

Published : Jul 9, 2020, 5:32 PM IST

கரூர்: காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.

காவிரி கூட்டு குடிநீர் திட்டம்
காவிரி கூட்டு குடிநீர் திட்டம்

கரூர் மாவட்டம், குளித்தலை, தோகைமலை ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 253 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.52.75 கோடி மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்டு குடிநீர் வழங்குவதற்கான சோதனை இயக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.

காவிரி கூட்டு குடிநீர் திட்டம்
காவிரி கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை ஆய்வு செய்யும் அமைச்சர்.
அதனை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.குளித்தலை, தோகைமலை ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 253 குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 55 லிட்டர் வீதம் வழங்கும் வகையில், இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் கவிதா, குளித்தலை சார் ஆட்சியர் ஷேக்அப்துல்ரகுமான் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.