கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "மாவட்டத்தில் 18 ஆயிரம் நபர்கள் உயிரிழந்துள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் 5 ஆயிரம் பேர் மட்டும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்தும் அவை நீக்கம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கரூர் மாவட்டத்தில் ஏராளமான திமுகவினர் 34 இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று உள்ளனர். இவர்கள் கள்ள ஓட்டு போட்டுவிடலாம் என்று நினைக்கிறார்கள்
அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போது திமுகவில் இணைந்தவருமான செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை ஊழல் குறித்து முன்னாள் அமைச்சர் நேரு மீது ஒருமணி நேரம் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதை புத்தகமாக வெளியிட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். திமுக முன்னாள் அமைச்சர் நேரு மீது குற்றம்சாட்டிய அவர், தற்போது திமுகவில் இருக்கிறார்" என்று தெரிவித்தார்.