கரூர் மாவட்டம் தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டான்கோயில் கிழக்கு ஊராட்சியில், பொது மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அட்ரியன் பள்ளி முதல் கரூர் நகராட்சி கழிவுநீர் வடிகால் வரை 3 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய வடிகால் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்து, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
இதில், கரூர் மாவட்ட திட்ட அலுவலர் கவிதா, முன்னாள் எம்எல்ஏ காமராஜ் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது, தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில், 'குடிநீரைப் பொறுத்தவரையில் சீராக குடிநீர் வழங்குவதற்காக புதிதாக குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இனிமேல் அதிக பணம் இருந்தால் போதும், தண்ணீரைப் பெறலாம் என்ற எண்ணத்தை மாற்றும் வகையில் ஒரே முறையான சீரான குடிநீர் வழங்க குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைவருக்கும் சமமான குடிநீர் வழங்கப்படும்' எனத் தெரிவித்தார்.
மேலும், பேசிய அவர் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கத்தோடு அதிமுக அரசு செயல்படுகிறது எனவும் கூறினார்.
இதையும் படிங்க:நிபா குறித்த போதிய விழிப்புணர்வு - விஜய பாஸ்கர்