உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. இதன் காரணமாக பலர் உணவு இல்லாமல் தவித்துவருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், கைவிடப்பட்டோர் என பலர் தவித்துவருகின்றனர், இதற்கிடையில் கரூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள திருமாநிலையூர் தாந்தோன்றிமலை பசுபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருநங்கைகள் வசித்துவருகின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களாக திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து நிவாரண உதவி வேண்டிவந்தனர். இதையறிந்த சமூக ஆர்வலர்கள் பலர் உதவி செய்ய முன்வந்தனர். இதையடுத்து கார்த்தி ரசிகர் மன்றம் சார்பில் இன்று அவர்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.
இதையும் படிங்க... உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருநங்கைகள் கோரிக்கை