ETV Bharat / state

அன்றாட செலவுக்கு பணமில்லை - அழகிரி

மத்திய அரசிடம் அன்றாட செலவுக்குக்கூட பணம் இல்லை அதனால்தான் ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணத்தை எடுத்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

k.s.alagiri
author img

By

Published : Aug 29, 2019, 5:35 PM IST

கரூர் மாவட்டம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான செயல்வீரர் மற்றும் வீராங்கனை கூட்டம் நடைபெற்றது. கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி பங்கேற்று முன்னிலை வகித்தார். இதில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மத்திய அரசை வெளுத்து வாங்கும் கே.எஸ்.அழகிரி

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அழகிரி, ”அன்றாட செலவுக்குகூட மத்திய அரசிடம் பணம் இல்லாமல் ரிசர்வ் வங்கியில் இருக்கக்கூடிய உபரி நிதி ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு தன்வசப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தப் பணமானது பஞ்சம் அல்லது ஏதேனும் யுத்தங்கள் நடைபெற்றால் மட்டுமே செலவு செய்ய முடியும். ஆனால், மத்திய அரசு சட்டத்தை மீறி ரிசர்வ் வங்கியிடமிருந்து பணத்தை எடுத்திருக்கிறது. இந்தியாவில் பஞ்சமோ, யுத்தமும் ஏதேனும் வந்திருக்கிறதா அதனால்தான் மத்திய ஆசு ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணத்தை எடுத்தீர்களா?

தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடு சென்றிருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும் துறைவாரியாக முக்கிய பொறுப்புகளை அந்தந்தத் துறையிடம் ஒப்படைத்து சென்றிருக்கவேண்டும். இது சட்டம் அல்ல மரபு” என்றார்.

Intro:மத்திய அரசிடம் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லை ஆதலால் ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணத்தை எடுத்து உள்ளது- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி கரூரில் பேட்டி

Body:கரூர் மாவட்டம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான செயல்வீரர் மற்றும் வீராங்கனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் கூட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி கலந்துகொண்டு முன்னிலை வகித்தார். மேலும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர் இதில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை மற்றும் செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி.

மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி கூறுகையில் :-
அன்றாட செலவுக்கு கூட மத்திய அரசிடம் பணம் இல்லாமல் ரிசர்வ் வங்கியில் இருக்கக்கூடிய உபரி நிதி ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு தன்வசம் படுத்தியுள்ளது குறிப்பாக இந்த பணமானது பஞ்சம் அல்லது ஏதேனும் யுத்தங்கள் நடைபெற்றால் இதிலிருந்து எடுத்து செலவு செய்வது வழக்கம் ஆனால் மத்திய அரசு சட்டத்தை மீறி ரிசர்வ் வங்கியிடமிருந்து பணத்தை எடுத்து இருக்கிறது. அதனால் இந்தியாவில் பஞ்சமோ யுத்தமும் ஏதேனும் வந்திருக்கிறதா அதனால்தான் நீங்கள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணத்தை எடுத்தீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று இருப்பது வரவேற்கத்தக்கது ஆனால் இதுவரை இரண்டு முறை சென்னையில் அண்ணிய மூலதனங்களை பெறுவதற்காக மாநாடுகள் நடத்தப்பட்டது அதில் எத்தனை தொழிற்சாலைகள் வந்தன தற்பொழுது பரிசினை எத்தனை தொழிற்சாலை இருக்கின்றன என்று முதல்வர் வெள்ளை அறிக்கை விடுத்தாள் நமக்கு நன்மையோ இல்லையோ வெளிநாட்டவர்கள் மூலதனம் செய்வதில் மகிழ்ச்சி அடைவார்கள் என்றார்.

மேலும் தமிழக முதல்வர் வெளிநாடு சென்றுள்ளார் இருப்பினும் துறைவாரியாக முக்கிய பொறுப்புகளை அந்தந்த துறையிடம் ஒப்படைத்து சென்றிருக்கவேண்டும் இது சட்டம் அல்ல மரபு என்றும் அப்பொழுதுதான் பணியானது சரிவர இயங்கும் என்றும் இதனால் அவர் வெளிநாட்டில் போய் அந்த வேலையை பார்ப்பார் இல்லை தமிழ்நாட்டு பிரச்சனையை கவனிப்பார் என்று கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.