ETV Bharat / state

கரூரில் முதலமைச்சர் பழனிசாமிக்கு ஒட்டப்பட்ட திடீர் சுவரொட்டியால் பரபரப்பு! - karur aiadmk

கரூர்: முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட திடீர் போஸ்டர்களால், அதிமுகவினர் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Tn cm poster
Tn cm poster
author img

By

Published : Sep 12, 2020, 3:50 PM IST

கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக, அதிமுக அரசின் நலத்திட்டங்களை பட்டியலிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த சுவரொட்டியில் கரூர் சட்டப்பேரவை உறுப்பினரும் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கரின் புகைப்படம் இல்லாமல், பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டி ஒட்டப்பட்டிருப்பது அதிமுகவினர் மத்தியில் கூடுதலாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவரொட்டியில் அதிமுக அரசின் 23 திட்டங்கள் பட்டியலிடப்பட்டு, 'எடப்பாடியாரை குறை சொன்னால் நாக்கு அழுகிவிடும்' என்றும்; இந்தத் திட்டங்கள் ஒரு சிலவற்றை பட்டியலிட்டால் கணக்கிலடங்காது என்ற சில வாசகங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

மகப்பேறு நிதி உதவி உயர்வு, மீனவர்களுக்கு 5 ஆயிரம் இலவச வீடுகள், குடிமராமத்துத் திட்டம், ரூ.1000 பொங்கல் பரிசு, சிறப்பு வேளாண் மண்டலம் , மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரி என 23 திட்டங்கள் பட்டியலிடப்பட்டு 'நேதாஜி சுபாஷ் சேனை - தமிழ்நாடு' என்கின்ற பெயரில் பெரிய சுவரொட்டிகள் கரூர் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

சுவரொட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நின்று கொண்டிருப்பது போலவும்; அருகில் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் படமும் அதில் இடம்பெற்றுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.