கரூர் மாவட்டம் பிரபல நகைக் கடை அருகில் இருக்கக்கூடிய பாரதி நகர் 2ஆவது குறுக்கு சந்தில் மணிவேல் என்ற பெயரில் அடுக்குமாடி உள்ளது. அந்த அடுக்குமாடி கட்டடத்தில் வசிப்பவர் மகாலிங்கம். இவர் ஒரு தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். மகாலிங்கம் தினமும் காலையில் உடற்பயிற்சிக்காக மிதிவண்டியை உபயோகிப்பது வழக்கம். அந்த மிதிவண்டியை 5000 ரூபாய் கொடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அவர் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் அவரது மிதிவண்டியை ஜனவரி 6ஆம் தேதி மாலை 4 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றுள்ளார். பின்னர் இது குறித்து அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த பொழுது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச் சென்றது தெரியவந்தது.
மேலும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும் தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.