கரூர் மாவட்டம், திண்டுக்கல் ரோட்டில் உள்ள ராம் தியேட்டர் அருகில் ஆனந்த் என்பவரின் மொபைல் கடைக்கு ரீசார்ஜ் செய்ய சென்றுள்ளார். கடையின் அருகில் லோடு ஏற்றி வந்த மினி லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, கார்த்திக் என்கிற மனநலம் பாதிக்கப்பட்டவர் லாரியை ஓட்ட முயற்சித்துள்ளார்.
அப்போது, அந்த லாரி எதிர்பாராதவிதமாக செல்போன் கடைக்குள் புகுந்தது. இதில் ரீசார்ஜ் செய்ய வந்த ஆனந்த், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஆனந்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.