தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் மண்டலத்தைச் சேர்ந்த 892 ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.219 கோடியே 80 லட்சம் மதிப்பிலான ஓய்வுதிய பண பலன் காசோலையை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், ’தேசிய அளவில் போக்குவரத்துத் துறைக்கென மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் 33 விருதுகளில் 9 விருதுகளை தமிழ்நாடு போக்குவரத்து கழகம் பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆரம்ப காலத்திலிருந்தே இந்தியாவில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறைதான் முதலிடம் பிடித்துவருகிறது’ என்றார்.