கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மதியம் இரண்டு மணி வரை மட்டுமே அனைத்து வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் இயங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்திருந்தார்.
இருப்பினும் கரூர் மாவட்டம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஜவகர் பஜார் பகுதியில் அதிக ஜவுளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதில், நான்கு தளங்களைக் கொண்ட மிகப்பெரிய தனியார் ஜவுளி கடை இன்று அரசு விதித்த விதிமுறைகளை மீறியதாக புகார் எழுந்தது.
அதனடிப்படையில், கரூர் நகராட்சி ஆணையர் அந்த ஜவுளி கடையை பூட்டி சீல் வைத்தார். மேலும் அருகில் உள்ள கடைகள் அனைத்தையும் அரசு விதிமுறையின்படி கடைப்பிடிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: நாய்கள் மூலம் கரோனாவா? அச்சத்தில் மக்கள்