கரூர் மாவட்டம் மாயனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருக்காம்புலியூர் காவேரி ஆற்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், மாயனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாயனூர் காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து இறந்த இளம் பெண் யார் என்பது குறித்த தகவல்களை விசாரித்து வருகின்றனர்.
மேலும் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்திலும் காவலர்கள் விசாரணை நடத்துகின்றனர்.
காவேரி ஆற்றில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.