கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் அமைந்துள்ள அய்யம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார். தொடர்ந்து வேலாயுதம்பாளையம், புஞ்சை புகலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு பணியாற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
மேலும், கரோனா முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்து மருத்துவர்களுடன் கலந்தாலோசித்தார். இந்த ஆய்வின்போது கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய விசிக!