தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக நேற்று (பிப்.21) கரூர் மாவட்டத்திற்கு வருகைதந்த முதலமைச்சர் பழனிசாமிக்கு குளித்தலையில் கரூர் மாவட்ட அதிமுக சார்பிலும், தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும்.
ஸ்டாலின் பொய்யாகவே பேசி வருகிறார். அவருக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும். திமுக குடும்ப கட்சி கார்ப்ரேட் கம்பெனி அதன் சேர்மன் ஸ்டாலின் திமுகவிற்காக பாடுபட்டவர்கள் பலர் இருந்தும் அவர்களை பரப்புரைக்கு அனுப்புவதில்லை. உதயநிதிக்கும் திமுகவிற்கும் என்ன சம்பந்தம். அதிமுகவில் அடிமட்ட தொண்டனும் முதலமைச்சர் ஆகலாம். ஆனால் திமுகவில் ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களே முதலமைச்சராக வர முடியும்.
குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதி வேளாண் பெருமக்கள் தொழிலாளிகள் நிறைந்த பகுதி, விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்கள் நன்றாக தெரியும். திமுக தலைவர் தற்போது பொதுமக்களிடம் வாங்கும் மனுக்களை பெட்டியில் போட்டு பூட்டி வீட்டில் வைத்துவிட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராகி திறப்பேன் என்று கூறுகிறார். இப்படி பட்ட தலைவரை எங்கேயாவது பார்த்ததுண்டா.
2019இல் ஊர் ஊராக சுற்றி பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. அவர்களின் குறைகள் தீர்க்கப்பட்டதா, அந்த மனுக்கள் என்ன ஆயிற்று அப்போது வாங்கிய மனுக்கள் போலவே இப்போது வாங்கி வரும் மனுக்களும் இருக்கும். அதிமுக அப்படி அல்ல எதை சொல்கிறோமோ அதை செய்கின்ற கட்சி. 2006இல் திமுக தேர்தல் அறிக்கையில் நிலம் அற்ற விவசாயிகளுக்கு நிலம் தருவதாக கூறினார்கள். ஆனால் தரவில்லை நிலத்தை கொடுக்காவிட்டால் பரவாயில்லை பிடுங்காமல் இருந்தாலே போதும்" என்றார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்: உதயநிதி!