கரூர் மாவட்டத்தில் பனங்காட்டு படை கட்சியின் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. கொங்கு மண்டல பொறுப்பாளர் சதா தலைமை வகித்த இந்நிகழ்ச்சியில் கொங்கு மண்டல துணை பொறுப்பாளர், கரூர் மாவட்ட பொறுப்பாளர் என பலர் கலந்துகொண்டனர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த கொங்கு மண்டல பொறுப்பாளர் சதா, கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதி மட்டுமல்லாது தமிழகத்தில் 234 தொகுதியிலும் பனங்காட்டு படை கட்சியின் சார்பில் தனித்து வேட்பாளரை நிறுத்தி தேர்தலில் வெற்றி பெறுவோம், பனைத் தொழில் செய்யும் தொழிலாளர்களின் நலன் கருதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினோம்.
ஆனாலும், அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால், குறிப்பாக பனங்”கள்” இறக்குவதற்கு நீண்ட காலமாக அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டிக்கும் விதமாக, நாடார் சமுதாய மக்களின் வாக்குகளை சேகரிக்க ஆளுங்கட்சியான அதிமுக மற்றும் திமுகவை எதிர்த்து பனங்காட்டு படை கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:’என்னை எதிர்த்து எடப்பாடியே போட்டியிட்டாலும் பின்வாங்க மாட்டேன்’