கரூர் மாவட்டம் தாந்தோனிமலை அருகில் இருக்கக்கூடிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இக்கல்லூரியில், இந்த ஆண்டுக்கான உள்துறை சார்பில், அனைத்து துறை மாணவ மாணவிகளுக்கும் விளையாட்டு போட்டி நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக இன்று கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை கல்லூரியின் உடற்கல்வி துறை சார்பில் தலைமை ஏற்று, உடற்கல்வி ஆசிரியர்கள் நடத்தினர்.
கல்லூரியில் பயிலும் 16 துறை மாணவ-மாணவியர் திறமையை வெளிப்படுத்தும் விதமாக போட்டியில் கலந்துகொண்டனர். அதைப்போல் அடுத்தடுத்த நாட்களும் கபடி என பல போட்டிகள் தொடர்ந்து, ஒரு வாரம் நடைபெறும் என, விளையாட்டுத் துறை ஆசிரியர்கள் கூறினர்.
இதையும் படிங்க: '11ஆம் வகுப்பு தமிழ் தேர்வு எளிது'- மாணவர்கள் மகிழ்ச்சி