ETV Bharat / state

"ஆடு மேய்த்தாவது மகனை அரசு அதிகாரி ஆக்குவேன்" - தன்நம்பிக்கையோடு உழைக்கும் மாற்றுத்திறனாளி தாய்!

special story about a disabled mother: மகனை அரசு அதிகாரி ஆக்குவேன் என்ற நம்பிக்கையோடு உழைக்கும் மாற்றுத்திறனாளி தாய் குறித்த செய்தி தொகுப்பை இங்கு காணலாம்.

special story about a disabled mother
ஆடு மேத்தாவது மகனை அரசு அதிகாரி ஆக்குவேன் என்ற நம்பிக்கையோடு உழைக்கும் மாற்றுத்திறனாளி தாய்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 7:22 PM IST

Updated : Oct 27, 2023, 9:13 PM IST

கரூர் மாற்றுத்திறனாளி பெண்ணின் தன்நம்பிக்கையை விளக்கும் தொகுப்பு

கரூர்: கரூர் அருகே கடவூர் தாலுகா வரவணை கிராமத்தில் உள்ள சுண்டுக்குழிப்பட்டியைச் சேர்ந்தவர் பானுமதி. பிறவியிலே இரண்டு கைகள் குறைபாடு உடன் பிறந்து, மாற்றுத்திறனாளியாக இருந்தாளும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய் வாழ்ந்து வருகிறார் பானுமதி.

பானுமதியைப் போலப் பிறவியிலே மாற்றுத்திறனாளியாகப் பிறந்து, குடும்பத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டும் அவலநிலை பல்வேறு கிரமங்களில் நிலவும் சூழலில் பானுமதியின் பெற்றோர் மயில் ராவணன்-பழனியம்மாள் தம்பதியினர் கூலி வேலை பார்த்தாலும் தனது மகளை எட்டாம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளனர்.

கடந்த 2014 ம் ஆண்டு பானுமதியின் தாய்மாமா இறப்புக்கு வந்த உறவுக்காரனா திண்டுக்கல் மாவட்டம் ஏரியோடு கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் பானுமதியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார். இதற்கு பானுமதியின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காத நிலையில் பானுமதியைத் திருமணம் செய்து கொண்டு கேரளாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார் ராமசாமி.

இதனை அடுத்து ஓராண்டாகக் கேரளாவில் வசித்து வந்த ராமசாமி-பானுமதி தம்பதிக்கு மணிகண்டன் என்ற மகன் பிறந்துள்ளார். இதற்கிடையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராமசாமியை பானுமதி கண்டித்தும் கேட்காததால், தனது ஒரு வயது மகன் மணிகண்டனுடன் சுண்டுக்குழிப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

நிம்மதியான மணவாழ்க்கை அமையவில்லை என்ற ஏமாற்றத்திலிருந்த பானுமதி, தனது மகனுக்காகக் கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டு தற்போது தனது மகன் மணிகண்டனை அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்க வைத்து வருகிறார். தனது இரு கைகளும் இயல்பாகா இல்லாவிட்டாலும், மனதில் தன்னம்பிக்கையுடன் தனது மகனைப் படிக்கவைத்து அரசு அதிகாரியாக உருவாக்க வேண்டும் என்ற லட்சிய இலக்கை நோக்கிப் பயணப்படுகிறார் பானுமதி.

இது குறித்து பானுமதியிடம் கேட்டபோது, "எனது மகனின் கல்விக்கு உதவும் வகையில் அரசின் உதவி ஏதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து உதவி கோரியுள்ளேன். ஆனால் இதுநாள் வரை அரசு தரப்பில் எந்த உதவியும் கிடைக்கவில்லை. 100 நாள் வேலைத்திட்டத்தில் பணி கிடைத்தால் குறைந்தபட்ச வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் எனக்கு, 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி அட்டையும் வழங்கப்படவில்லை.

தன்னைப் போல யாரும் அரசு அலுவலகங்களில் உதவி தேடிக் கிடைக்காமல் காத்திருக்கக் கூடாது. உதவி என்று செல்லும் பொது மக்களுக்கும் தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் நல்ல அதிகாரியாகத் தனது மகன் அரசுப் பணியில் சேர்ந்து சேவையாற்றுவான்" என்று நம்பிக்கையோடு தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூர் மாவட்ட ஆட்சியரிடம் உதவி கோரி மனு அளிக்க வந்த பானுமதி குறித்த செய்தி ஊடகங்களிலும் செய்தித்தாள்களிலும் வந்ததைப் பார்த்து, கரூரைச் சேர்ந்த தன்னார்வலர் தொண்டு நிறுவனம் ஒன்று பானுமதிக்குப் பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு ரூ.40,000 மதிப்பில் 8 ஆடுகளை வாங்கி கொடுத்துள்ளனர்.

மேலும், பிரபல இசையமைப்பாளர் டி.இமான், பானுமதி வீட்டில் ஆடுகளைப் பராமரிக்கச் சிறு ஆட்டுக்கொட்டகையை அமைத்துக் கொடுத்துள்ளார். இதேபோல, வரவணை கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரின் மகன் பானுமதிக்கு வீட்டில் தனிநபர் கழிவறை ஒன்றைக் கட்டிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் கோலாகலமாக நடைபெற்ற சப்பர பவனி.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

Last Updated : Oct 27, 2023, 9:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.