தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தின் சமுதாயக் கூடத்தில் 152 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலமாக இன்று (மே. 31) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிவகாமசுந்தரி, இளங்கோ, மாணிக்கம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை அலுவலர்கள், திமுக கரூர் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நொய்யல் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரியூட்ட வரிசை: கூடுதல் தகனமேடை ஏற்படுத்த கோரிக்கை!