கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிக்கு மே 19ஆம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி கடைவீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது செந்தில்பாலாஜி பேசுகையில், வாடகை வீட்டில் குடியிருப்போருக்கும், ஒரே வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்கள் வசித்து வருபவர்களுக்கும் 3 செண்ட் இலவச வீட்டுமனை வழங்கப்படும். தளபதி திட்டம் என்ற பெயரில் ஜூன் 3ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாளில் உதயசூரியன் நகர் என்ற பெயரில் வீட்டு பட்டா வழங்கப்படும் என்றார். மேலும், அரவக்குறிச்சி பகுதியில் புதிய கலைக்கல்லூரி கட்டப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். இந்த பரப்புரையின்போது கரூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.