திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி, இன்று கரூரில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், 115க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும், 5000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
இந் நிகழ்ச்சியின்போது கரூர் மக்களின் நலனுக்காக www.hopeofkarur.com என்ற புதிய இணையதளத்தை வேலை வாய்ப்பு முகாமில் தனது பெற்றோருடன் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளி, எம்சிஏ பட்டதாரி பானுமதியை வைத்து செந்தில் பாலாஜி தொடங்கிவைத்தார்.
இதில் கரூர் மாவட்டத்தை, முதன்மையான மாவட்டமாக உருவாக்க மகளிர் முன்னேற்றம், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு, இளைஞர்களின் நலம், கல்வி உதவி கோருவோர் உள்ளிட்டோரின் கோரிக்கைகளை இந்த இணையதளத்தின் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
தொடர்ந்து வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை செந்தில் பாலாஜி எம்எல்ஏ வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ”இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கியுள்ளார்கள். அதனால்தான் தனியார் துறைகளை ஒருங்கிணைத்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்திவருகிறோம். அடுத்த ஆட்சி திமுக ஆட்சிதான். வீடு தேடி அரசு வேலை வாய்ப்புகள் வரும்” என்றார்.
இதையும் படிங்க:புதுச்சேரி பகடை ஆட்டம்: பெரும்பான்மையை நிரூபிப்பாரா நாராயணசாமி?