கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் சூர்யா தலைமையிலான குழுவினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக திருச்சியைச் சேர்ந்த கோமல் சாலமோன் ராஜா என்பவர் ஓட்டிச் சென்ற காரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
இச்சோதனையில் உரிய ஆவணங்களின்றி 7.76 லட்சம் ரூபாய் பணம் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, உடனடியாக பணத்தைப் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் கிருஷ்ணராயபுரம் சார் கருவூலத்தில் அதனை ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி கோயிலுக்கு சசிகலா திடீர் விசிட்