இந்தியாவில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் கரோனா சிகிச்சைப் பணியில் மருத்துவர்கள் பயன்படுத்தும் பிபிஇ உடைகள் சில முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய வகையிலேயே உள்ளன.
அதனால் மறுபயன்பாட்டு மருத்துவ உடைகளைத் தயாரிப்பதில் பல்வேறு ஆடை நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கரூர் மாவட்டம், ஆண்டான்கோயில் பகுதியிலுள்ள அபினவ் பேப்ரிக்ஸ் என்ற தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் ஒன்று மருத்துவ மறு பயன்பாட்டு ஆடையை தாயாரித்துள்ளது. அந்த ஆடை சுவிட்சர்லாந்து நாட்டில் புலகத்திலுள்ளது.
அதனை வைரோ விட்டோ என அழைக்கலாம். வைரோ விட்டோ என்றால் ஆண்டி வைரல் பேப்ரிக்(ஆடை). அந்த ஆடையில் வைரோ பிளாக் எனும் கெமிக்கல் கலக்கப்பட்டிருக்கும். அதனால் அந்த ஆடையில் வைரஸ் கிருமிகள், பூஞ்சைகள் உள்ளிட்டைவைகள் தங்காமல் அழிக்கப்படும். அதில் மருத்துவ ஆடைகள் தயாரிக்கப்பட்டால், அதனை பலமுறை சலவை செய்து பயன்படுத்திக்கொள்ளாலாம்.
15 ஆண்டுகளுக்கும் மேல் செயல்பட்டு வரும் இந்த டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள இவ்வகை மறு பயன்பாட்டு மருத்துவ ஆடைகள், கரூரிலிருந்து பிற மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகள் என உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இது குறித்து பேசிய டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் நல்லமுத்து, "நாங்கள் தயாரித்துள்ள மறு பயன்பாட்டு மருத்துவ ஆடைகள், சென்னை, மும்பையைச் சேர்ந்த மருத்துவத் துறையினரால் சோதிக்கப்பட்டு 99.99 விழுக்காடு வைரஸ் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பானது என அங்கீகாரம் பெற்றது. இந்த ஆடையை 25 முறை கூட சலவை செய்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதற்காக நாங்கள் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து ரசாயன திரவங்களையும், வைரோ விட்டோ ஆடைகளையும் இறக்குமதி செய்துள்ளோம். அதில் ஹெய்க்யூ வைரோபிளாக் (HEIQ Viroblock) எனும் கெமிக்கல் கலக்கப்பட்டுள்ளது. அது வைரஸை அழிக்கூடிய அமிலமாகும். இந்தியாவிலேயே முதன்முறையாக கரோனா வைரஸ் பாதுகாப்பிற்காக வைரோ விட்டோ(VIRO VETO) என்ற கிருமிகளை அழிக்கக்கூடிய ஆடைகளை நாங்களாதான் தயாரித்துள்ளோம்.
அதையடுத்து இந்தியாவில் மொத்தமாக 5 நிறுவனங்களில்தான் வைரோ விட்டோ(VIRO VETO) ஆடைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் முகக் கவசம், கையுறை, முழு உடல் ஆடை என அனைத்தையும் தைத்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறோம்.
குறிப்பாக இந்த ஆடையை கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தாராளமாக பயன்படுத்தலாம்" எனத் தெரிவித்தார். மேலும் "எங்களது அடுத்த முயற்சியாக காவலர்களுக்கும், பொது மக்களுக்கும் உபயோகப்படும்படியான பாதுகாப்பு ஆடைகளை தயாரித்து வழங்க முயற்சி செய்து வருகிறோம்” என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவப் பணியாளர்களுக்கான பிரத்யேக ஆடை தயாரிப்பு!