ETV Bharat / state

குடகனாறு அணை குறித்த வல்லுநர் அறிக்கை; கோட்டையை நோக்கி பேரணி நடத்த குடகனாறு பாதுகாப்பு சங்கம் முடிவு! - கரூர் செய்திகள்

Kudakanar Dam: குடகனாறு அணை குறித்து வல்லுநர் அறிக்கை வெளியிட வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணி நடத்த இருப்பதாக குடகனாறு பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

rally-towards-the-fort-demanding-expert-report-on-kudakanar-dam
குடகனாறு அணை குறித்து வல்லுனர் அறிக்கை வெளியிட கோரி..கோட்டையை நோக்கி பேரணி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2023, 4:00 PM IST

குடகனாறு அணை குறித்து வல்லுனர் அறிக்கை வெளியிட கோரி..கோட்டையை நோக்கி பேரணி

கரூர்: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று (செப்-29) நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வருவாய் அலுவலர், வேளாண்மை இணை இயக்குநர் கோட்டாட்சியர் அரசு அதிகாரிகள், குடகனாறு பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் குடகனாறு ஆற்றில் கலக்கும் கழிவு நீரால் மாசுபடுவதை தடுக்கவும், வல்லுநர் குழு அறிக்கையை விரைவில் வெளியிட வேண்டும் என குடகனாறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின், குடகனாறு பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ராமசாமி ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது, “திண்டுக்கல் மாவட்டம் மேற்குதொடர்ச்சிமலையில் உருவாகி, வேடசந்தூர் அரவக்குறிச்சி வழியாக 108 கிலோ மீட்டர் பயணிக்கும் குடகனாறு அணை நீண்ட காலமாக மரபு வழியில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

ஆனால், வேடசந்தூர் பகுதியில் 1973இல் கருணாநிதியால் குடகனாறு அணை கட்டப்பட்டு, வெள்ளியணை வரை 84 கிலோ மீட்டர் வரை வலதுபுற வாய்க்கால் வெட்டப்பட்டு, வெள்ளியணை குளத்தில் நீர் நிரப்பப்பட்டு சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாயம் செழித்து வளர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 15 ஆண்டுகளாக நீர்வரத்து வரவில்லை. காரணம் என்னவென்றால், அந்த திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா நரசிங்கபுரம் என்ற இடத்தில் குடகனாற்றின் குறுக்கே ஒரு தடுப்புச் சுவரை அமைத்து, மரபு வழி வரக்கூடிய நீரை திசைமாற்றம் செய்துவிட்டனர்.

இதற்காக விவசாய சங்கங்கள் அமைத்து போராட்டம் செய்ததன் விளைவாக, 2020ஆம் ஆண்டு எக்ஸ்போர்ட் கமிட்டி எனும் குடகனாறு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகள் கடந்தும், இதுவரை வல்லுநர் குழு அறிக்கை வெளியிடப்படவில்லை. குடகனாறு பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், கரூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒட்டியுள்ள தோல் தொழிற்சாலைகள் கழிவு நீர் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி கழிவுநீர், தாடிக்கொம்பு, அகரம் பேரூராட்சி கழிவுநீரை நிரப்பும் அவலநிலை, குடகனாறு அணைக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்ட எல்லைகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக குடகனாறு பாதுகாப்பு சங்கம் போராட்டம் நடத்தியதன் விளைவாக நரசிங்கபுரம் தடுப்பு பகுதியில் இருந்து சிறிது தண்ணீர் பெற்று, குடகனாறு அணையை நிரப்பி வெள்ளியணை வரை தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்பட்டது. குடகனாறு அணை மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 5,800 ஹெக்டேர் பரப்பளவும், கரூர் மாவட்டத்தில் 9,800 ஹெக்டேர் பரப்பளவு நிலமும் விவசாயிகள் பாசன வசதி பெற்று வந்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகள் தண்ணீர் கொண்டு வரப்பட்டதால், சற்று ஆறுதலாக உள்ளது. ஆனால், அதற்கு முன்னர் 15 ஆண்டுகள் வறட்சியாக காணப்பட்டது. எனவே, குடகனாறு தொடர்பான வல்லுநர் குழு அறிக்கையை வெளியிட்டால் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

குடகனாறு வலது பிரதான வாய்க்காலில், 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் 100 கன அடி தண்ணீர் மட்டுமே செல்லக்கூடிய வாய்க்கால் பாதையில், 200 கன அடி தண்ணீர் செல்லும் அளவுக்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனை அருகாமையில் உள்ள குளங்களில் சேமிக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும் என தமிழக அரசையும், மாவட்ட ஆட்சியரையும் வலியுறுத்தி விவசாயிகள் கேட்டுக் கொள்கிறோம்.

திண்டுக்கல், கரூர் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தமிழக முதலமைச்சரை சந்திக்க நிறைய முயற்சி ஆறு மாத காலமாக சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இதுவரை தமிழக முதலமைச்சரைச் சந்திக்க முடியவில்லை. தமிழக முதல்வரைச் சந்திக்க அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, விவசாயிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் சென்னை கோட்டையை நோக்கி பேரணி நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, குடகனாறு அணையிலிருந்து வலது பிரதான வாய்க்கால் மூலமாக விவசாயத்துக்கும், குளங்களில் தண்ணீர் சேமிக்க தொடர்ந்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் விவசாயிகளை ஒன்றிணைத்து குடகனாறு அணை வல்லுநர் குழு அறிக்கையை வெளியிடக்கோரி கோட்டையை நோக்கி அடுத்த பேரணி மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தனியார் மருத்துவமனையில் கல்லூரி மாணவி பலி! முறையற்ற சிகிச்சை காரணமா? பெற்றோர் தர்ணா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.